காதல் காப்பியங்களின் கருவே
தரணியில் மொழி தோன்றுதற்கு முதலாய் இருந்த தேனமுதே
உனை வாழ்த்தி பாடுதற்கே இசை பிறந்தது
உனை பார்த்தே மானுடர்க்கு நாகரிகம் எனும் தெளிவு பிறந்தது
உலகப்போட்டியில் உனக்கே முதலிடம் எதற்கெனில்
இலக்கணங்களும் இலக்கியங்களும் எட்டுக்களும் , பத்துக்களும்
காண்டங்களும் ,நானூருகளும் உனை வைத்தே எழுதப்பட்டன
உன் பெயர் சொல்லி கண்டங்கலெங்கும் தலை நிமிர்ந்து நடப்பேன் நான்
கவலைப்படாதே உனக்கெதிராக நீ பிறந்ததிலிருந்து
நடக்கும் போட்டி போரில் உன் சிப்பாய்கள் வீர மரணம் அடைந்தாலென்ன
நானிருக்கிறேன் உனது வாளும் கேடயமுமாய் உன் புகழ் பரப்ப
உனை மறந்திருப்பேன் அக்கணம் உன் மடியிலே வீழ்ந்திருப்பேன்
என் தங்க தமிழே ..........
........................................................ இதழ் சுந்தர் .
0 comments:
Post a Comment