என் கவிதையின் ஆதி

என் கவிதையின் ஆதி

About Me

My photo
jayankondam, tamilnadu, India

Tuesday, August 23, 2011

உழவன்

வானம் பார்த்த வறண்ட பூமியது
 மழையாய் ஆங்கே வியர்வை துளிகள்
வானமும் பூமியும்    அவனை   உஷ்ணமாக்கி கொண்டிருக்க 
கண்களில் மட்டும் குளிர்ச்சி
அதுவும் கலந்தது மண்ணில் ஆலங்கட்டியாய்


மாற்றான் தோட்டத்து மகசூல் கெடாமல்
உழுது கொண்டிருந்தான் அவன்


அவன் சிந்தனை எனும் சாட்டைக்  குதிரையில்
மனைவியின் நப்பாசை,
பிள்ளைகளின் பாட சாலை பணம்,
 நோயுள்ள தன் தாயின் உடல் நலம்
என பாரங்களாய் ரெக்கை கட்டி பறந்துகொண்டிருக்க
கையில் உடைந்த பானையால்
குதிரையை நிறுத்தினாள் அவனவள்


"குதிருக்குள் கிடந்த கடை நெல்லை குத்திப்பார்த்தேன்    அரிசியில்லை
பாழாய் போன எலியும் நம் செல்ல பூனையும்
நம் வீட்டில் நண்பர்களாம்


அது காரணமாய் கரிப்பானையில் கிடந்த
நேற்று செய்த சுடுசோற்றை எடுத்து வந்தேன்
பட்ட மிளகாயுடன் 

தலை வரப்பில் காலில் முள் குத்த
அனிச்சையாய் முள் எடுக்க கை போய்
நழுவியது பானை"

சொல்லி முடித்தாள் கண்களில் கண்ணீருடன்
அது கண்ணீர் அல்ல கடல் நீர்
விட்டுச்செல் என இருவரும் தொடங்கினர் மழை பொழிய
ஆழ உழுதான் அவளிடத்தில்   வைத்துள்ள    காதல் போல

தேக்கில் செய்த அவனது இயந்திர ஏர்
  மண்ணில் நீச்சலடித்த  அக்கணம்
மூச்சு திணறி முறிந்து இறந்தது


ஆனந்தம் தலைக்கேறிய அக்கணத்தில்    
துள்ளாமல் துள்ளலை அடக்கி வைத்திருந்தன 
 அவனது காளைகள்
இனி இரு நாட்களாவது  விடுமுறை   என்கிற நோக்கில்

விதியை நொந்து மாட்டை கடிந்து சிக்கிகொண்டிருக்கும் 
  உடலின் மீத பகுதியை எடுக்க
கூடவே வந்தது தங்கச்சிலையும் 




                                                                         இதழ் சுந்தர் .......

Thursday, May 26, 2011

ஹைக்கூ ......

ஹைக்கூ ......

Friday, March 4, 2011

உண்மை சொல்லடி ......

. இதயப்பூட்டு .

Friday, February 18, 2011

பாத முத்தம்


என்ன கர்வம் உன் கொலுசுகளுக்குநானே கொலுசுகளின் ராணி எனமெத்தனமிட்டு  சிரிக்கின்றன எனை பார்த்து

அழுகின்றன நீ கழற்றி வைக்கும் சமயத்தில்உன் மாநிற மேனியின் முத்தம் பெற இயலாமைக்கு

கொலுசுகளுக்கு உயிர் கொடுக்கும் உன் அழகியவளைந்த பாதங்களால்உயிர் கொடு எனக்கு உன் பாத முத்தத்தால்எனதுதட்டில்

ஆனால் கண்டிப்பாக இடமில்லை உன் கொலுசுகளுக்கு நமது படுக்கையில்…………………...இதழ் சுந்தர்

ஹைக்கூ


  • வெட்டிய உன் கால் நகங்கள் நினைத்துகொண்டன உன்னுடன் இருந்த   அவ்வழகிய தருணங்களை -பாம்புத்தோல்
       இதழ் சுந்தர் .......

Monday, February 14, 2011

மாவரம் செய்தேனடா தமிழனாய் பிறக்க

மாவரம் செய்தேனடா தமிழனாய் பிறக்க

Saturday, February 12, 2011

மெழுகு

 

 

 

 



மெழுகு- எரிய எரிய குறையும்....

குறைய குறைய  எரியும் !

Friday, February 4, 2011

தமிழ்

காதல் காப்பியங்களின் கருவே
தரணியில் மொழி தோன்றுதற்கு முதலாய் இருந்த தேனமுதே

உனை வாழ்த்தி பாடுதற்கே இசை பிறந்தது

உனை பார்த்தே மானுடர்க்கு நாகரிகம் எனும் தெளிவு பிறந்தது

உலகப்போட்டியில் உனக்கே முதலிடம் எதற்கெனில்

இலக்கணங்களும் இலக்கியங்களும் எட்டுக்களும் , பத்துக்களும்

காண்டங்களும் ,நானூருகளும் உனை வைத்தே எழுதப்பட்டன

உன் பெயர் சொல்லி கண்டங்கலெங்கும் தலை நிமிர்ந்து நடப்பேன் நான்

கவலைப்படாதே உனக்கெதிராக நீ பிறந்ததிலிருந்து

நடக்கும் போட்டி போரில் உன் சிப்பாய்கள் வீர மரணம் அடைந்தாலென்ன

நானிருக்கிறேன் உனது வாளும் கேடயமுமாய் உன் புகழ் பரப்ப

உனை மறந்திருப்பேன் அக்கணம் உன் மடியிலே வீழ்ந்திருப்பேன்

என் தங்க தமிழே ..........

........................................................ இதழ் சுந்தர் .

கிராமத்துக் காளை

மனசு விட்டு பேசணும் டி உங்கிட்ட மனசு விட்டே பேசணும் டி

பொத்தி வெச்ச ஆசையெல்லாம் சுக்கு நூறா போனதடி

இன்னும் கொஞ்சம் நீண்டுச்சின்னா சத்தியமா வெடிச்சிடும் டி
இதயம் செத்து செத்து வாழுதடி

நூறு முறை கண்ணடிச்சு உசிர் கசிய கை பிடிச்சு

சிரிக்கும் போது சிதறும் கொஞ்ச முத்தஎல்லாம் செற புடிச்சு

காத்துக்கும் வேர்க்கும்படி உன்ன நானும் கையனச்சி
இத்தனையும் நெனச்சிருந்தேன் பாவி விதி பிரிச்சிடிச்சே
ஒத்தையில விட்டுடுச்சே

மல்லி பூவா நீயிருக்க வாசமா நானிருந்தேன்
பூவுக்கு வாசம் தேவ எனக்கு நீ தேவ இத பிரிச்ச சாமி இதுதானா அது தேவ

பிரிய பிரிய கூடுதடி ஏக்கம் உன்ன பாக்கணும்னு கொரயுதடி தூக்கம்

கட்டி போட்டா குட்டி போடும் ஆச அடக்கி வெச்சா பத்திக்கிடும்

பத்திக்கிட்டா பத்தட்டுமே மாமன் இருக்கேன் தீயணைக்க
வெசனம் வேணா தூங்கு புள்ள

...................................................இதழ் சுந்தர்

Tuesday, January 25, 2011

வீறு-கொள்

இதுவரை நீயென்று நினைத்த நீ இல்லை நீ........

விடியல்

காலம் ஒரு திருவிழா உன்னை தொலைத்துப்பார்...................

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
| - |